தற்போதைய செய்திகள்

கரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பு பணத்தை வழங்கிய 5 வயது சிறுமி

14th May 2021 02:48 PM

ADVERTISEMENT


ஈரோடு: ஈரோட்டில் 5 வயது சிறுவர்கள் தனது தான் சேமிப்பு பணத்தை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்காக  வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆகிறோரிடம் அளித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் அருகே உள்ள ஜந்துபானை புதுத்தெருவை  சேர்ந்தவர் செல்வகணபதி,மனைவி லட்சுமிநாராயணி. இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய 5 வயதான மகள் எஸ்.மேஹாஸ்ரீ நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தை செல்வகணபதி தரும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

அந்த வகையில் மேஹாஸ்ரீ தனது தாய் லட்சுமிநாராயணி ,தந்தை செல்வகணபதியுடன் ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து தனது சேமிப்பு பணம் சுமார் ரூ.10 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாவட்ட ஆட்சியர் கதிரவன் மேஹாஸ்ரீ பாராட்டினார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT