தற்போதைய செய்திகள்

ரமலான் பண்டிகை: வீட்டிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்!

14th May 2021 09:47 AM

ADVERTISEMENT

 

கரோனா பொது முடக்கம் காரணமாக ரமலான் பண்டிகையையொட்டி திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் வெள்ளிக்கிழமை வீட்டிலேயே தொழுகை நடத்தி இஸ்லாமியர்கள் கொண்டாடினர். 

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாள்களுக்கு நோன்பு கடைப்பிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்.14-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் புதன்கிழமை பிறை தென்படவில்லை. வானில் பிறை தெரியாவிட்டாலும் நோன்பு நாளில் இருந்து 30-ஆவது நாள் ரம்ஜான் பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (மே 14) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்தார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் கரோனா காலத்தில், ரமலான் பண்டிகையை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளைக் கொண்டாட வேண்டும் என அரசு கூறியிருந்தது. 

வீட்டிலேயே குடும்பத்தினருடன் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்.

குறிப்பாக, சமூக இடைவெளி, முகக் கவசம், அடிக்கடி கைகளை சோப்பு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, தேவையற்ற வகையில் வெளியே சுற்றித்திரிவதைத் தவிா்ப்பது, வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டிப்பிடிப்பது, கை குலுக்குவது ஆகியவற்றைத் தவிா்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக ரமலான் பண்டிகையையொட்டி திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் வெள்ளிக்கிழமை வீட்டிலேயே தொழுகை நடத்தி இஸ்லாமியர்கள் கொண்டாடினர். 

 

Tags : ரமலான் பண்டிகை வீட்டிலேயே தொழுகை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT