தற்போதைய செய்திகள்

வங்கிக் கடன் தவணைக்கு அவகாசம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN


வங்கிக் கடனுக்கான தவணை செலுத்துவதில் 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரிசர்வ் வங்கிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடனுக்கான தவணை செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கரோனா பரவலைத் தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், வங்கிக் கடனுக்கான தவணை செலுத்துவதில் 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆட்டோ, கால் டாக்ஸி வைத்திருப்போருக்கு கடன் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அவகாசமாக வழங்கப்படும் 6 மாத காலத்திற்கு வட்டித் இஎம்ஐ ஏதும் வசுலிக்கக் கூடாது என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT