தற்போதைய செய்திகள்

துறையூர் தினமணி முகவர் ந.சரவணன் மறைவு

11th May 2021 09:13 PM

ADVERTISEMENT

துறையூர் பகுதி தினமணி முகவர் சரவணன் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

துறையூர் தெற்குரதவீதியில் வசிப்பவர் ந. சரவணன்(37). இவர் கடந்த ஓராண்டாக உடல்நலமின்றி மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  கடந்த வாரத்தில் திருச்சி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவியும், 8 வயதுடைய தக்சின் என்ற மகனும், கவிதா என்கிற மூத்த சகோதரியும் உள்ளனர். இவருடைய தாத்தா கருப்பையா, தந்தை நடராஜன், சரவணன் என மூன்று தலைமுறையினர் துறையூர் பகுதி தினமணி முகவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு கோகுலகிருஷ்ணன் (அக்கா கணவர்)  -9786380754, 9655657694

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT