தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் மே 24 வரை பொதுமுடக்கம் அறிவிப்பு

7th May 2021 08:09 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய அவர், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாகவும், மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுபான விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கர்நாடகத்தில் இதுவரை 18,38,885 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Karnataka coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT