தற்போதைய செய்திகள்

கரைகிறதா மக்கள்நீதி மய்யம்: முக்கிய நிர்வாகிகள் விலகல்

6th May 2021 07:46 PM

ADVERTISEMENT

மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் பதவி விலகி இருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள்நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வெற்றியை பறிகொடுத்தார். 

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

அப்போது தேர்தல் தோல்வி குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் துணைத் தலைவரான மகேந்திரன் விலகுவதாக அறிவித்தார். 

ADVERTISEMENT

மேலும் கட்சியை புனரமைக்க துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே. குமரவேல், முருகானந்தம், மவுரியா, நிர்வாகக்குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர் பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளனர். 

தேர்தல் தோல்வியால் பின்னடைவை சந்தித்துள்ள மக்கள்நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறியுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : Kamal MNM
ADVERTISEMENT
ADVERTISEMENT