தற்போதைய செய்திகள்

சூழலியலைக் காக்க நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

5th May 2021 06:39 PM

ADVERTISEMENT

சூழலியலைக் காக்க 14 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட 67 பேர் முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து திமுக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வராக நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூழலியல் நீதிக்கான 14 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட 67 பேர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ளனர்.

சூழலியலைக் காக்க எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிடுவது, காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு தடை, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அந்தக் கடிதத்தில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன், கல்வியாளர் வசந்திதேவி, ஓய்வு பெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் உள்ளிட்ட 67 பேர் கையெழுத்திட்டுள்ளனர். 

ADVERTISEMENT

மேலும் புதிதாக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம்: கிளிக் செய்யவும்

 

Tags : Actor Vijay Sethupathi Vetrimaran
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT