தற்போதைய செய்திகள்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு

4th May 2021 08:12 PM

ADVERTISEMENT

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.

தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட டிராபிக் ராமசாமி கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று மாலை காலமானார்.

அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : traffic ramasamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT