தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்

2nd May 2021 11:16 PM

ADVERTISEMENT

தமிழக சட்டபேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத்த தேர்தலின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. 

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 156 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. 
இந்நிலையில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

ADVERTISEMENT

இந்நிலையில் மக்கள்நீதி மய்யத்தின் தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், “பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT