தற்போதைய செய்திகள்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து!

2nd May 2021 03:50 PM

ADVERTISEMENT


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 153க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முன்னிலை, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளில் திமுக கூட்டணி  153 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள் வாழ்த்து செய்தியில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உண்மையிலேயே தகுதியான வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு  வாழ்த்துகள். உங்கள் மீது வைத்து வாக்களித்த தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துகிறேன் என்று அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.

இதேபோன்று ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ்,  சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT