தற்போதைய செய்திகள்

விஜயபாஸ்கர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

2nd May 2021 10:03 AM

ADVERTISEMENT


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. 

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

முதல் சுற்றில் 14 -ஆவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளியே குறிப்பிடப்பட்ட எண்ணில் தவறு இருப்பதால் அந்த இயந்திரத்தை எண்ண முகவர்கள் அனுமதிக்கவில்லை. 

ADVERTISEMENT

இந்த நிலையில் அப்பெட்டியை பின்னர் எண்ணுவதா?, இரண்டாவது சுற்றைத் தொடங்குவதா? என்பதில் முகவர்களும் வேட்பாளர்களும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, பின்னிலையில் இருந்து வந்த விஜயபாஸ்கர் முன்னிலை இருந்து வருகிறார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT