தற்போதைய செய்திகள்

நன்னிலம் தொகுதியில் அமைச்சர் ஆர். காமராஜ் பின்னடைவு

2nd May 2021 10:53 AM

ADVERTISEMENT


நன்னிலம் தொகுதியில் 4 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், முதல் சுற்றில் முன்னிலையில் இருந்த காமராஜ் அடுத்த மூன்று சுற்றுக்களிலும் பின்னடைவில் உள்ளார்.

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. 

இந்த சூழலில் வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றன. ஆளும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து இருந்து வருகின்றனர். 

நன்னிலம் தொகுதியில் நன்னிலம் தொகுதியில் 4 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், முதல் சுற்றில் முன்னிலையில் இருந்த அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான காமராஜ், அடுத்த மூன்று சுற்றுக்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
நான்காம் சுற்று முடிவுவில்
காமராஜ் (அதிமுக) - 14560
ஜோதிராமன் (திமுக) -15657

ADVERTISEMENT
ADVERTISEMENT