தற்போதைய செய்திகள்

திமுக தொண்டர்களுக்கு ஆர்.எஸ். பாரதி அறிவுரை!

2nd May 2021 01:53 PM

ADVERTISEMENT


கரோனா தொற்றை மனதில் கொண்டு கழக தோழர்கள் எந்தவித கொண்டாட்டங்களையும் வீதியில் கூடி நடத்த வேண்டாம் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தி உள்ளார். 

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்திருந்த நிலையில், நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 115 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வரும் நிலையில் திமுக தொண்டர்கள் சென்னை அறிவாலயத்தில் கூடி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கரோனா தொற்றை மனதில் கொண்டு கழக தோழர்கள் எந்தவித கொண்டாட்டங்களையும் வீதியில் கூடி நடத்த வேண்டாம் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தி உள்ளார். 

மேலும் கூட்டம் கூடாமல் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT