ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில் பலத்த போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்கள், அனைத்து அரசியல் கட்சியினரின் முகவர்கள் மற்றும் ஊடகத் துறையினரை ஆய்வுக்குப் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.