குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்துக்கு அதிகாலையிலேயே வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் வர தொடங்கினர்.
அவர்களிடம் அடையாள அட்டை உள்ளதா, கரோனா சான்றிதழ் உள்ளதா என்று பரிசோதித்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு உடலின் பரிசோதனை செய்யப்பட்டது.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கவச உடை வழங்கப்பட்டது. மையத்துக்குள் வரும் அனைவருக்கும் முகக் கவசமும் வழங்கப்பட்டது.