தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் ஏப்.6 வரை இருசக்கர வாகனப் பேரணிக்கு தடை: தேர்தல் ஆணையம்

27th Mar 2021 03:13 PM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை இருசக்கர வாகனப் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டின் சில இடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் இருசக்கர வாகனப் பேரணிகளை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்தது. 

இதனைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட உத்தரவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி நடந்துவருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் வாகனப் பேரணி நடத்த தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Election commission TNElections2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT