தற்போதைய செய்திகள்

’பாஜக மரியாதையை விட்டுக் கொடுக்காது’: நடிகை குஷ்பு

2nd Mar 2021 06:55 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் என்றார் நடிகை குஷ்பு.

திருநெல்வேலி நகரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசார பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. 

பாஜக தலைமையிலான மத்திய அரசு கல்வி, சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளது. அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்றி வருகிறார். திமுகவினர் ஆதராமின்றி குற்றம் சுமத்துபவர்களாகவே உள்ளனர்.

ADVERTISEMENT

திமுக எப்போதும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். தென்தமிழகத்தில் பிரசாரம் செய்த ராகுல்காந்தி பொய் பிரசாரம் செய்துள்ளார்.  ஒரு தலைவன் மக்களுக்கான திட்டங்களைச் சொல்ல வேண்டும். மாறாக கடலில் நீச்சலடிப்பது, பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி சவால் விடுப்பது போன்ற மக்களை திசைத்திருப்பும் செயல்களை செய்வது சரியானதல்ல.

கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஜக மரியாதையை விட்டுக்கொடுக்காது.  கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணியின் தாக்கம் என்பது அந்த அணி அமைந்த பின்பே தெரியவரும். சமையல்எரிவாயு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான முயற்சிகளை பாஜக அரசு எடுத்து வருகிறது என்றார்.

தொடர்ந்து அவர் திருநெல்வேலி நகரத்தில் பாரதியார் தெரு, ரத வீதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார்நாகேந்திரன், மாவட்ட தலைவர் ஆ.மகாராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

Tags : Kushbu TNElections2021 BJP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT