தற்போதைய செய்திகள்

புதுச்சேரி அமைச்சர்கள்? - முதல்வரிடம் வாழ்த்து

DIN

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ்-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்துள்ள நிலையில், பாஜக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ சரவணகுமார், சந்திர பிரியங்கா முதல்வர் ரங்கசாமியை தனித்தனியாக சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 15-ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து என்.ஆர். காங்கிரஸ்-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி முதல்வராகவும், பாஜக பொதுச்செயலர் ஆர். செல்வம் சட்டப்பேரவைத் தலைவராகவும், பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர்.

இதனை அடுத்து நீண்ட இழுபறிக்குப் பின்னர், என். ஆர். காங்கிரஸ், பாஜக இடையே அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிந்து, அமைச்சர்களுக்கான பெயர் பட்டியலை முதல்வர் ரங்கசாமி ஆளுநரிடம் வழங்கியுள்ளார். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில், அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், பாஜக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ சரவணகுமாரும், என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், காரைக்காலை சேர்ந்த சந்திரபிரியங்கா ஆகியோரும் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், நமச்சிவாயம், சரவணகுமார், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை தனித்தனியாக சந்தித்து, வாழ்த்து பெற்ற புகைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன. இதனால் இவர்கள் தான் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதில், புதுச்சேரியில் இரண்டாவது பெண் அமைச்சராக சந்திர பிரியங்கா எம்எல்ஏ-வும், சட்டப்பேரவைக்கு புதியவரான பாஜக எம்எல்ஏ சரவணக்குமாரும் முதல்முறையாக அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இவர்களுக்கான இலாக்காக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT