தற்போதைய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: தினசரி பாதிப்பு 54,069 ஆக அதிகரிப்பு; பலி 1,321ஆக குறைவு

24th Jun 2021 10:09 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளன; 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி ஒரு கோடியை கடந்தது. அடுத்த 136 நாள்களில், 2 கோடியை கடந்த நிலையில், அடுத்த 50 நாள்களில் மேலும் ஒரு கோடி பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு 3 கோடியை கடந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 42,640-ஆக இருந்த தினசரி பாதிப்பு, புதன்கிழமை 50,848 -ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 54,069 -ஆக அதிகரித்துள்ளது.

7-ஆவது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 83 நாள்களுக்குப் பிறகு 6,27,057-ஆக குறைந்துள்ளது. 

தொடா்ந்து 42-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 2,89,94,855 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். ஒரே நாளில் 68,817 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

தொற்று பாதிப்புக்கு 24 மணி நேரத்தில் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,91,981-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 18,59,469 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 39,78,32,667 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 30,16,26,028 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT