தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி

24th Jun 2021 08:20 AM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கர்நாடகம் மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கபினியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

ADVERTISEMENT

கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறககப்பட்டுள்ளது. ஐந்து நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் புதன்கிழமை காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. புதன்கிழமை காலை வினாடிக்கு 2,376 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்தது. வியாழக்கிழமை காலை நீர் வரத்து 7492 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீளும் நிலை உருவாகி உள்ளது.

புதன்கிழமை காலை 89.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் வியாழக்கிழமை காலை. 89.15 அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 51.68 டி.எம்.சியாக உள்ளது. 

மேட்டூர் அணைக்கு புது வெள்ளம் வருவதால் மீன்கள் அதிகம் பிடிபடும் வாய்ப்பு உள்ளது. இதனால் மேட்டூர் நீர் தேக்கத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டாயிரம் மீனவர்கள், மீனவர் உதவியாளர்கள், இத்தொழிலை நம்பியுள்ள மற்ற தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் மேட்டூர் அணை மீனவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Increase water level  Mettur Dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT