தற்போதைய செய்திகள்

கண்ணதாசன் பிறந்த தினம்: உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை

24th Jun 2021 11:13 AM

ADVERTISEMENT

 

 

சென்னை: கவிஞர் கண்ணதாசனின் 95 -ஆவது பிறந்த தினம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசின் சார்பில் தியாகராய நகர் கோபதி நாராயணன் சாலையில் உள்ள கவியரசு கண்ணதாசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் கண்ணதாசன் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

 

அதேபோன்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசைசௌந்தரராஜன் கண்ணதாசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில்  உள்ள மார்பளவு சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதணன் ரெட்டி, அரசு சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT