தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: முதல்வர் அறிவிப்பு

24th Jun 2021 11:25 AM

ADVERTISEMENT


சென்னை: அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது  முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசி வருகிறார். 

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் பதிலுரை - முழு விவரம்

கடந்த இரண்டு தினங்களாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இந்த அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார். 

ADVERTISEMENT

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT