தற்போதைய செய்திகள்

கண்ணதாசன் 95-வது பிறந்த தினம்: காரைக்குடியில் அவரது சிலைக்கு ஆட்சியர் மாலையணிவித்து மரியாதை

24th Jun 2021 12:47 PM

ADVERTISEMENT


காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி தமிழக அரசு சார்பில் கண்ணதாசன் திருவுருவச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

ADVERTISEMENT

காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபம்

இந்நிகழ்ச்சியில்  கவிஞர் கண்ணதாசனின் மகள் விசாலாட்சி, தேவகோட்டை கோட்டச்சியர் பிரபாகரன், காரைக்குடி  வட்டாச்சியர் அந்தோனி, அகில இந்திய கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மருத்துவர் ஆர்.வி.எஸ். சுரேந்திரன், பொதுச்செயலாளர் கவிஞர் அரு. நாகப்பன்,  மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT