தற்போதைய செய்திகள்

சேவாலயா சார்பில் 2500 பேருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

20th Jun 2021 03:24 PM

ADVERTISEMENT



திருவள்ளூர்: சேவாலயா மற்றும் தனியார் நிறுவனம் பங்களிப்புடன் திருவள்ளூர் அருகே பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 2500 பேருக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் சேவாலயா நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சேவாலயா அமைந்துள்ள சுற்றியுள்ள 42 கிராமங்களைச் சேர்ந்த 2500 குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும் முன்வந்தது. அதன் அடிப்படையில் சேவாலயா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். 

இதில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மாவட்ட தலைமையிடத்து துணைக்காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பங்கேற்று கிராமத்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு கரோனா உபகரணங்களை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சி மூலம் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 2500 பேருக்கும் தலா ரூ.550 மதிப்பிலான முககவசம், கிருமிநாசினி, கைகழுவும் திரவம், வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகள் அடங்கிய பை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர் அபர்ணா, சிவன்வாயல் ஊராட்சி தலைவர் ஆ.மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை துணைத்தலைவர் கிங்கஸ்டன் மற்றும் ஆனந்தன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா வளாகத்தில் கிராமங்களைச் சேர்ந்தோருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தலைமையிடத்து துணைக்காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உடன் அறக்கட்டளை நிர்வாக முரளிதரன் உள்ளிட்டோர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT