தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் ஒரே நாளில் 11.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

20th Jun 2021 08:52 PM

ADVERTISEMENT

 

அமராவதி:   ஆந்திரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 11.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்ததுள்ளது.

மாநில சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர தடுப்பூசியின் சாதனையின் ஒரு பகுதியாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் 11.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

இது குறித்து சுகாதார செயலாளர் அனில் சிங்கால் கூறுகையில்: 

ADVERTISEMENT

ஒரே நாளில் ஆறு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய நிலையில் இருந்து தற்போது அந்த அளவு சற்று அதிகரித்துள்ளது என்றார். முதல்வர் ஒய் எஸ். ஜெகன் மோகன் உத்தரவின் பேரில் மாநில சுகாதார அமைச்சகம் இந்த மெகா தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

மாநிலத்தில் இதுவரை 96 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், நுகர்வு அடிப்படையில் மத்திய அரசு தடுப்பூசி அளவை வழங்கினால், ஆந்திர அரசு அதிக டோஸ்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.

கோவிட் தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலையைச் சமாளிக்க நிர்வாகம் தயாராக இருப்பதாகவும், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜனை சேமிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார செயலாளர் அனில் சிங்கால் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் கருப்பு பூஞ்சை சிகிச்சையளிக்க 60,000 குப்பிகள் கொண்ட ஆம்போடெரிசின்-பி தடுப்பூசி கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் சிங்கால்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT