தற்போதைய செய்திகள்

வட மாநிலங்களில் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை: இந்திய வானிலை மையம்

20th Jun 2021 07:28 PM

ADVERTISEMENT


வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ காற்று மெதுவாக முன்னேறி வருவதால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மெதுவாக முன்னேறி வருவதால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை.

மேலும் தென்கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.  

மேற்கு பகுதி காற்றின் தாக்கம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் உத்தரகாண்ட்டில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT