தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தி பிறந்தநாள்: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவி வழங்கல்

19th Jun 2021 11:31 AM

ADVERTISEMENT


ஈரோடு: ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல்காந்தி பிறந்தநாள் சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் ராகுல் காந்தி பிறந்தநாள் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி, ஈரோடு  பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., திருமகன் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார். 

ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு, அரசு மருத்துவமனை ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிகளில்,  சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாஷா,  தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், மாநகர் மாவட்ட தலைவர் ஈபி ரவி,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

Tags : Rahul Gandhis birthday Congress party
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT