தற்போதைய செய்திகள்

திமுக சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்கள்

19th Jun 2021 12:25 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், திருக்குவளையில் பிறந்து, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு இல்லம் முன்பாக முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு, கரோனா கால நிவாரண உதவியாக, அரிசி, மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது.

நாகை தெற்கு மாவட்ட செயலாளர் என்.கெளதமன் தலைமை வைகித்து, நிவாரண உதவிப் பொருள்களை வழங்கினார்.  ஒன்றிய கழக செயலாளர்கள் கீழையூர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், தலைஞாயிறு மகா.குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் திமுக மாவட்ட பிரதிநிதியும், திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவருமான இல.பழனியப்பன், வேளாங்கண்ணி பேரூர் கழக பொறுப்பாளர் மரியசார்லஸ் ,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சோ.பா.மலர்வண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் இரா.மாரிமுத்து,மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆர்.ஏ.டி.அண்ணாதுரை  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரண உதவி பொருள்கள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

Tags : corona term relief item DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT