தற்போதைய செய்திகள்

கரோனா பாதிப்பால் இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் உயிரிழப்பு

19th Jun 2021 09:48 AM

ADVERTISEMENT


இந்திய முன்னாள் தடகள் வீரர் மில்கா சிங்(91) கரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மில்கா சிங், கடந்த மாதம் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து வீட்டுக்கு வந்தவருக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததை அடுத்து சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். 

இளம் தடகள வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக விளங்கியவர் மில்கா சிங். 
மில்கா சிங் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இவரது மனைவி நிர்மவா கவுர் கரோனா தொற்று பாதிப்பால் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். 

ஆசிய, காமன்வெல்த், தேசிய விளையாட்டு போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வேட்டையாடியவர் மில்கா சிங்.

Tags : மில்கா சிங் உயிரிழப்பு இந்திய முன்னாள் தடகள வீரர் Milkha Singh passes away
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT