தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் காய்கனி மார்க்கெட்டில் தீ விபத்து

19th Jun 2021 11:12 AM

ADVERTISEMENT


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் காய்கனி மார்க்கெட்டில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் பரபரப்பு ஏற்பட்டது. தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகில் அமைந்திருப்பது  பென்னிங்டன் காய்கனி மார்க்கெட். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட்டில் இதுவும் ஒன்று. நூற்றாண்டு கடந்த பெருமையைப் பெற்ற இந்தப் பென்னிங்டன் காய்கனி மார்க்கெட்டில் சுமார் 170 -க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்நிலையில், பென்னிங்டன் மார்க்கெட்டில் மத்தியில் உள்ள கடை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையில் சுமார் 100க்கும் மேற்பட்ட சாக்குகள் இருந்தன. அந்த சாக்குகளில் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கின.

ADVERTISEMENT

 தீப்பிடித்த கடையையும் தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் எரிந்த சாக்குகள்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி சுந்தரகுருசாமி மற்றும் அந்தோணிக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திறஅகு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாமல் இருக்க கடுமையாக போராடி தீயை அணைத்தனர்

சரியான நேரத்தில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் நெருக்கமாக அடுத்தடுத்து உள்ள கடைகளில் தீ பரவாமலும், பெரிய தீ விபத்து நிகழாமலும் தவிர்த்தனர். 

இந்த தீ விபத்தில் ஏராளமான சாக்குகள் எரிந்தன. தீ விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT