தற்போதைய செய்திகள்

ஏடிஎம் கொள்ளை முயற்சி: ஒருவர் கொலை; 4 பேர் கைது 

19th Jun 2021 10:09 AM

ADVERTISEMENT


திருவாரூர்: திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார், இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கூடூரில் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது.  இந்த ஏடிஎம்மை இரவு ஒரு மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் உடைக்க முயற்சி செய்ததாக தெரிகிறது.

அப்போது சப்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் எழுந்து அவர்களை பிடிக்க முயன்றபோது நடைபெற்ற தாக்குதலில் கூடூர் நடுத்தெருவைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். 

தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன், பிரதாப், ஆகாஷ், விஜயன என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : ATM robbery One killed
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT