தற்போதைய செய்திகள்

மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபா கைது

DIN

உத்தரகாண்ட்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்துள்ளனர்.  

சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். 

இந்த நிலையில் சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை வேறொரு மாநிலத்திற்குச் சென்று நடத்துவதற்கு ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது தனியார் மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை காலை சிவசங்கர் பாபா தப்பிச் சென்றார்.

இதையடுத்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை, உத்ரகாண்டில் உள்ள அவருக்கு சொந்தமான ஆசிரமங்களில் பதுங்கி உள்ளரா என  காவல்துறையினர் தேடி வந்தனர். 

மேலும் சிவசங்கர் பாபா நேபாளத்திற்கு தப்பிச்செல்லாமலும், உத்தரகாண்ட், தில்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பி தில்லி வந்து காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை தில்லி போலீஸார் கைது செய்து, தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சிவசங்கர் பாபா புதன்கிழமை மாலை அல்லது நாளை வியாழக்கிழமை காலை சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT