தற்போதைய செய்திகள்

சாலை விபத்து: உயிருக்கு போராடும் கன்னட நடிகர்

13th Jun 2021 08:51 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: பெங்களூரு: சாலையில் விபத்துக்குள்ளான கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய திரைப்பட விருது பெற்ற கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தீடீரென வாகனத்தில் இருந்து  சறுக்கி விழுந்ததில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அடுத்த 48 மணி நேரம் அவருக்கு மிகவும் முக்கியமானது என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று நடிகரின் சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்தார்.

சஞ்சாரி விஜய் நடித்த 'நானு அவநல்ல அவலு' (நான் அவனல்ல அவள்) திரைப்படத்திற்கு வெகுவாக பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் Kannada actor Sanchari Vijay
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT