தற்போதைய செய்திகள்

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் இளையான்குடிபகுதிகளில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள  தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் குவிந்தனர்.

கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்ட காலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்த மக்கள் தற்போது கரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டினர்.

இதனால் தமிழகம் முழுவதும் தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதையடுத்து தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலை ஏற்பட்டது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 -ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

தடுப்பூசி இருப்பு இல்லை என்ற பதில் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எப்போது தடுப்பூசி வரும் என்றும் மருத்துவ பணியாளர்கள் உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தினமும் தடுப்பூசி மையங்களுக்கு பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் மானாமதுரை, திருப்புவனம் இளையான்குடி பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.

தடுப்பூசி போடும் முகாம்கள் , அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  இவர்களுக்கு அங்கிருந்த செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

மானாமதுரை காந்தி சிலை எதிரே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. குற்றவியல் மற்றும் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஏ.முத்து இசக்கி, சார்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.கீதா முகாமை தொடங்கி வைத்தனர்.

பின்னர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.கீதா  முதல்நபராக தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன்பின் வழக்கறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் இந்த முகாமுக்கு வந்து நிண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மானாமதுரை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற இம்முகாமில் மானாமதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எம். முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT