தற்போதைய செய்திகள்

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

11th Jun 2021 11:29 AM

ADVERTISEMENT


திருச்சி: மேட்டூர் அணை திறக்கப்படுவதைத் தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக, திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவிரி, டெல்டா பகுதிகளில் பாசனத்துக்காக மேட்டூர் அணையானது சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை காலை திருச்சி வருகை தந்தார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகை தந்த அவருக்கு, விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆட்சியர் சு. சிவராசு மற்றும் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி சிவா எம்பி, எம்எல்ஏ-க்கள் இனிகோ இருதயராஜ், கதிரவன், பழனியாண்டி, தியாகராஜன், ஸ்டாலின் குமார், செளந்தரபாண்டியன் உள்ளிட்டோர் மற்றும் அரசு அலுவலர்கள்  பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். திமுக தொண்டர்களும் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கார் மூலம் கல்லணைக்கு சென்று மேம்பாட்டு பணிகளை பார்வையிடும் அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், குளங்களையும் பார்வையிட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து சுற்றுலா மாளிகையில் மதியம் ஓய்வு எடுக்கவுள்ளார்.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக, கொடியாலம் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்ட பிறகு சேலத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags : Chief Minister MK Stalin Welcome
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT