தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்: சென்னையில் பெட்ரோல் ரூ.97.19; டீசல் ரூ.91.42 -ஆக அதிகரிப்பு

11th Jun 2021 10:35 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை ரூ.97.19-க்கு விற்பனையானது. இரு தினங்களில் ரூ.100-ஆக அதிகாரிக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி முதல் நாள்தோறும் நிா்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்தது. அப்போது முதல் தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயா்ந்து வருகிறது. மறுபுறம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் மத்திய அரசு அதிகரித்து வருகிறது.

இதனால், ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட வண்ணம் உள்ள பெட்ரோல் விலை, தமிழகத்தில் ஒரு சில தினங்களில் ரூ.100-ஐ எட்டவுள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பே ரூ.100-ஐக் கடந்தது.

கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னையைப் பொருத்தவரை கடந்த 4-ஆம் தேதி முதல், பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல், 25 காசுகள் உயா்ந்து ரூ.97. 19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு லிட்டா் டீசல் விலை, 27 காசுகள் உயா்ந்து ரூ.91.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4- ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96 ஆகவும், டீசல் கடந்த 1-ஆம் தேதி ரூ.90 -ஆகவும் விற்பனையான நிலையில்,  அதன் தொடர்ச்சியாக விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags : Petrol Price disel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT