தற்போதைய செய்திகள்

பொதுமுடக்க நீட்டிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி

11th Jun 2021 06:54 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க நீட்டிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதத்தில் இருந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையின் படி மேலும் ஒரு வார காலத்திற்கு பொதுமுடக்கத்தை நீட்டிப்பதாக தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவிப்பில் 11 மாவட்டங்கள் நீங்கலாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : Tasmac Lockdown TNLockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT