தற்போதைய செய்திகள்

டுவிட்டருக்கு தடை: இந்தியாவின் 'கூ' செயலியில் கணக்கை தொடங்கியது நைஜீரியா

11th Jun 2021 09:59 AM

ADVERTISEMENT


புதுதில்லி: டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'கூ' செயலியில் நைஜீரியா அரசு அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது. 

பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக டுவிட்டர் சமூக ஊடகத்தில் நைஜீரிய அதிபர் முகமது புஹாரி கருத்து பதிவிட்டிருந்தார். அதனை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாகக் கூறி நைஜீரியாவில் டுவிட்டர் பயன்பாடுகளுக்கு நைஜீரிய அரசு தடை விதித்தது. 

இதையடுத்து இந்தியாவின் கர்நாகடம் மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'கூ' செயலியின் பயன்பாடு நைஜீரியாவில் அதிகரிக்க தொடங்கியது. 

இந்நிலையில், 'கூ' செயலியில் நைஜீரியா அரசு தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து 'கூ' நிறுவனத்தில்ன் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறியிருப்பதாவது:  இந்தியாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் 'கூ' செயலின் பன்பாட்டு சிறகை விரித்துள்ளோம். நைஜீரியா அரசு கூ செயலியில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து நைஜீரிய உள்நாட்டு மொழியிலும் 'கூ' செயலியின் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குவதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பல மொழிகளிலும் கூ செயலியை பயன்படுத்துவற்கான அதிக வசதிகளை ஏற்படுத்த தயாராக உள்ளோம். இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தங்களில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி உள்ளோம் என்று கூறியுள்ளார். 

Tags : Indias Koo Nigerian government
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT