தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

11th Jun 2021 12:51 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: பெட்ரோல், டீசல் விலை மற்றும் எரிவாயு உருளை விலைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎல்ஏ பெட்ரோல் பங்க் எதிரில் காங்கிரஸ் கட்சியின் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் வி. முருகேசன் தலைமை வகித்தார்.

முன்னாள் மாநிலப் பொதுச்செயலர் வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவ்யநாதன், நகர காங்கிரஸ் தலைவர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

எரிபொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சிக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 

Tags : Congressmen protest pudukottai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT