தற்போதைய செய்திகள்

சீர்காழி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

11th Jun 2021 02:57 PM

ADVERTISEMENT


சீர்காழி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக சீர்காழி புதிய பேருந்து நிலையம் பெட்ரோல் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் லட்சுமணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்  சரவணன் முன்னிலை  வகித்தனர். 

இதில், மத்திய அரசுக்கு எதிராகவும் , பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை திரும்பப் பெறக் கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பினர் . இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் செல்வம் ,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் வட்டாரத்  தலைவர் பிரியகுமார், சிவகுமார் பொதுச்செயலாளர் தேவநேசன் நகர நிர்வாகிகள் ராஷித், அறிவுடைநம்பி, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : diesel price hikes petrol price hikes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT