தற்போதைய செய்திகள்

உசிலம்பட்டி: பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

11th Jun 2021 01:21 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி பகுதியில் காங்கிரஸ் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி சீமானூத்து மற்றும் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  நகர காங்கிரஸ் தலைவர் எம்.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார  தலைவர் வெஸ்ட்ன்  முருகன் முன்னிலை வகித்தார் . மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி வரவேற்றார். மாநில செயலாளர் எஸ்.ஒ.ஆர். இளங்கோவன், முன்னாள் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் காந்தி சரவணன் முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகாந்தன், வட்டார துணைத்தலைவர் தவமணி, வட்டார செயலாளர் தசதர பாண்டியன் நகரச் செயலாளர்கள் மாணிக்கம், சரவணபவன், மெட்ரோ பாண்டியன், மகளிர் அணியினர் முத்துமணி அழகம்மாள் முத்துலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

பெட்ரோல் டீசல் , சமையல் எரிவாயு , விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெட்ரோலியப் பொருள்கள் மீதான அதிகப்படியான வரியை  ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒன்றிய பகுதியில் சீமானுக்கு நகர் பகுதியில் உசிலம்பட்டி மதுரை சாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 
 

Tags : Congress protest protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT