தற்போதைய செய்திகள்

வேதாரண்யம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

11th Jun 2021 01:12 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம், ஆயக்காரன்புலம் ஆகிய ஊர்களில் செயல்படும் 4 பெட்ரோல் பங்குகள் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுப்படுத்தவும், பெரும் நிறுவனங்களுக்கு சாதகமான நிலைபாட்டை கொண்டுள்ளதாக மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸர்.

வேதாரண்யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்ராஜ் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆரோ.பால்ராஜ், நகரச் செயலாளர் வைரவன், இளைஞர் காங் மாவட்ட துணைத் தலைவர் ஆப்கான், நிர்வாகிகள் மருதூர் கணேசன், சோட்டா பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆயக்காரன்புலத்தில் வட்டாரத் தலைவர் ஆர்.ஜெகநாதன், ஊராட்சி மன்றத் தலைவி சத்தியகலா, நிர்வாகிகள் ஆதித்தன், சந்திரசேகரன், ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags : Congress protest petrol and diesel price hikes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT