தற்போதைய செய்திகள்

சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற 19 ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருள்கள் வழங்கல் 

10th Jun 2021 02:51 PM

ADVERTISEMENT


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளையின் சார்பில் முழு பொதுமுடக்கத்தையொட்டி ஆதரவற்ற ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருள்களை வியாழக்கிழமை வழங்கினர். 

சங்ககிரி, வைகுந்தம், சங்ககிரி ஆர்.எஸ். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் ஆதரவற்ற ஏழைகள் பொதுமுடக்கத்தையொட்டி வேலைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளடங்கி உள்ளனர். அவர்களுக்கு உணவு சமைக்க பொருள்கள் வேண்டி சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதனையடுத்து  அரிமா சங்க மண்டலத்தலைவர் சண்முகம், பட்டயத்தலைவர் பொறியாளர் மோகன், லாரி உரிமையாளர் செல்வராஜ்  உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்கள் அரிசி, மளிகை பொருள்களை வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து 19 ஏழைகளுக்கு அறக்கட்டளைத் தலைவர் வி.சத்தியபிரகாஷ், துணைத்தலைவர் எஸ்.மணிகண்டன், செயலர் எஸ்.மாணிக்கம், துணைச் செயலர் ஜெ.அஜித், பொருளாளர் வி.நிர்மலா, நவீன்குமார், நவீன் உள்ளிட்ட பலர் அவர்களது இருப்பிடத்திற்கே சென்று வழங்கினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT