தற்போதைய செய்திகள்

இந்தியாவில் தொடா்ந்து 1 லட்சத்துக்கு கீழ் குறைந்து வரும் தினசரி கரோனா பாதிப்பு

10th Jun 2021 09:40 AM

ADVERTISEMENT



புது தில்லி: இந்தியாவில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில்  94,052 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தொடா்ந்து 3-வது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கைத் தொடா்ந்து கணிசமாக சரிந்து, 11,67,952 -ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 10-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 6148 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 3,59,676 போ் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 19 -ஆம் தேதி 4552 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச தினசரி உயிரிழப்பாக இதுவரை இருந்து வந்தது. 

தொடா்ந்து 28-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,51,367 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள். 

ADVERTISEMENT

இதுவரை மொத்தம் 2,76,55,493 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இதன்படி மொத்த பாதிப்பில் குணமடைந்தவா்கள் 94.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில்  20,04,690 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,21,98,253 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23,90,58,360 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT