தற்போதைய செய்திகள்

பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் கைது

8th Jun 2021 07:29 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை அயனாவரத்தில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை அயனாவரத்தில் செயல்படும் பிரபலமான தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ஆனந்தன்(55). வணிகவியல் ஆசிரியரான இவர், அந்த பள்ளியில் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பாடம் நடத்தி வந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆனந்தனிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டு வரையில் படித்த மாணவிகள் சமூக ஊடகங்கள் வாயிலாக ஆனந்தன், தங்களுக்கு அங்கு படிக்கும்போது பாலியல் தொல்லைக் கொடுத்தாக இரு வாரங்களுக்கு முன்பு புகார் செய்தனர்.

இப் புகார் தொடர்பாக பள்ளி நிர்வாகம் உடனடியாக விசாரணை செய்தது. விசாரணையில் ஆனந்தன் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

மேலும் இது குறித்து கல்வித்துறையும், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையமும் தனித்தனியாக விசாரித்து அறிக்கைகளை தமிழக அரசுக்கு அனுப்பியது.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆசிரியர் ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்குமாறு  கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆனந்தன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர், ஆனந்தனை இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags : பாலியல் தொல்லை மாணவி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT