தற்போதைய செய்திகள்

தொப்பலாக்கரையில் 200க்கு மேற்பட்டோருக்கு இலவச காய்கறிகள் தொகுப்பு வழங்கல்

8th Jun 2021 07:42 PM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோருக்கு, மா.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜூ தலைமையில் இலவச காய்கறிகள் அடங்கிய தொகுப்பு அக்கட்சி சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் வழங்கப்பட்டது.    

திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கிராமத்தின் மா.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்டராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தொப்பலாக்கரை கிராமத்தினர் சுமார் 200க்கு மேற்பட்டோருக்கு இலவசக் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வெங்கட்டராமன் நேரில் வழங்கினார்.

Tags : திருச்சுழி தொப்பலாக்கரை காய்கறிகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT