தற்போதைய செய்திகள்

நரிக்குறவர்களை தேடிச் சென்று நிவாரண பொருட்கள் வழங்கி வரும் நடிகர் விஜய் மக்கள் இயக்கம்

6th Jun 2021 07:06 PM

ADVERTISEMENT

 

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் திருவிழா நேரங்களில் சிறுவர் விளையாட்டு பொருட்களை வியாபாரம் செய்வதும் மற்ற நாட்களில் ஊசி, பாசி உள்ளிட்ட அலங்கார பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கரோனா காரணமாக கடந்த ஓராண்டுகளாக அவ்வப்போது அறிவிக்கப்படும் ஊரடங்கால் கிராமங்களில் திருவிழா நடைபெறுவதில்லை. மேலும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைமை உள்ளதால், அன்றாடம் வாழ்வை நடத்துவதற்கு நரிகுறவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதை அறிந்த விராலிமலை ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தினர் செல்லம்பட்டியில் வசித்து வரும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு தேடிச் சென்று நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இதில் கலந்து கொண்ட விராலிமலை விஜய் மக்கள் இயக்க ஒன்றிய தலைவர் தங்கம் பழனி தலைமையிலான நிர்வாகிகள் அரிசி, பருப்பு, காய்கறிகள், முட்டை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்களை வழங்கி உதவியதற்கு நரிக்குறவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர் என்றார்.

ADVERTISEMENT

அண்மையில் விபத்தில் தாய் தந்தையை இழந்த  பெண் பிள்ளைகளுக்கு ரூபாய் 25,000 தந்து உதவியது போல, விராலிமலை அரசு மருத்துவமனை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு தயாரித்து விநியோகிப்பதும், மலைக்கோயிலில் உள்ள குரங்கு, மயில்களுக்கு பல்வேறு பழங்களை உணவாக அளிப்பது போன்ற தொடர் நற்பணிகளில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : குரங்கு விராலிமலை செல்லம்பட்டி கிராமம் மலைக்கோயிலில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT