தற்போதைய செய்திகள்

டவ்-தே புயுலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

2nd Jun 2021 08:01 PM

ADVERTISEMENT

டவ்-தே புயலில் சிக்கி காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் அரபிக்கடல் பகுதியில் டவ்தே புயல் ஏற்பட்டது. இதனையொட்டி புயல் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தமிழகத்திலிருந்து அரபிக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 21 மீனவர்கள் மாயமாகினர். 

அதனைத் தொடர்ந்து காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில் தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் காணாமல் போன மீனவர்களின்ன் வாரிசுதாரர்களுக்குகு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.20 கோடி வழங்கப்படுவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT