தற்போதைய செய்திகள்

ரூ.1 கோடி மதிப்பிலான பான்பராக், குட்கா பறிமுதல்: 3 லாரி, வேன் பறிமுதல்

DIN


சேலத்தில் நள்ளிரவு வாகன தணிக்கையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா எடுத்து வந்த 3 லாரி, ஒரு வேன் பறிமுதல் செய்தனர்.

பெங்களூருவில் இருந்து சேலம் வழியே பல்வேறு மாவட்டங்களுக்கு தடைசெய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா கடத்தி செல்வதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவில் கூடுதலாக ரோந்து செல்ல அவர் உத்தரவிட்டார்.

காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வியாழக்கிழமை இரவு சேலம் டவுன் போலீஸ் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சீலநாயக்கன்பட்டி, அன்னதானபட்டி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது லாரி மார்க்கெட்டில் இரண்டு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரிகளில் என்ன உள்ளது என போலீசார் சோதனை செய்தனர். அப்போது பான்பராக் மற்றும் குட்கா மூட்டைகள் மாட்டு தீவன மூட்டைகளுக்கு அடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இரண்டு லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 7 ஆயிரத்து 300 கிலோ பான்பராக், குட்கா மற்றும் பல்வேறு பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 70 ஆயிரம் ஆகும்.

பான்பராக், குட்கா பொருள்களை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு லாரிகளை கொண்டு வந்து நிறுத்தி யாருக்கு பான்பராக் குட்கா கடத்தி செல்லப்பட்டது என விசாரித்து வருகின்றனர். 

இதுபோல சேலம் அம்மாபேட்டை போலீஸ் உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு ஒரு லாரியில் இருந்து மற்றொரு வேனுக்கு பார்சல் மூட்டைகள் இறக்கிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்து சந்தேகம் அடைந்த உதவி ஆணையர் ஆனந்தக்குமார் அங்கு சென்று விசாரித்தபோது லாரியிலிருந்து பான்பராக், குட்கா ஆகியவை மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.  பின்னர் லாரியையும் வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

லாரியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பான்பராக், ஹான்ஸ் பொருள்கள் இருந்தது. இந்த லாரி, வேனையும் போலீசார் அம்மாபேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர். 

 சேலத்தில் நேற்று ஒரே நாளில் பான்பராக், குட்கா கடத்தி வந்த 3 லாரி, ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட பான்பராக், குட்கா மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகன தணிக்கையை தீவிரமாக நடத்தி பான்பராக், குட்கா கடத்திய லாரிகளை பறிமுதல் செய்த உதவி ஆணையர்கள் மற்றும் போலீசாரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT