தற்போதைய செய்திகள்

காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு: டிஜிபி உத்தரவு

30th Jul 2021 09:01 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவலர்கள் உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு வாரம் ஒருநாள் விடுப்பு தரப்பட வேண்டும் எனவும் காவலர்களின் பிறந்தநாள், திருமண நாள்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் மேலும் 1,947 போ் பாதிப்பு

பணியில் ஈடுபடும் வார விடுமுறை தேவைப்படாத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : Holiday TN Police
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT